நோய்களை போக்கும் ருத்ர மந்திரம்

மனிதர்களாக பிறந்ததற்கு நாம் அனைவருமே மிகுந்த பேறு பெற்றிருக்கிறோம். இந்த மனித பிறவியிலும் உடலுக்கு எந்த ஒரு கொடுமையான பாதிப்புகளை உண்டாக்கும் வியாதிகள் இன்றி இருப்பது நமது புண்ணியமிக்க முன்வினை பயன் காரணமாகும். ஒரு சில மனிதர்களுக்கு நீண்ட நாட்கள் ஏதேனும் ஒரு வகையான நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய நோய்கள் ஏற்படுவதற்கு கிரக தோஷங்களும் ஒரு வகையில் காரணமாகிறது. இவை அனைத்தையும் போக்கும் ஒரு மந்திரமாக “ருத்ர மந்திரம்” இருக்கிறது

ருத்ர மந்திரம்

நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய
த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய

காலாக்னீ ருத்ராயநீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய
ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம

தீயவற்றை அழிக்க ரௌத்திரம் கொண்ட ருத்ரமூர்த்தியாகிய சிவ பெருமானை போற்றும் ருத்ர மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் 9 முறை அல்லது 27 முறை துதித்து வரலாம். திங்கட்கிழமைகள், பிரதோஷம், சிவராத்திரி போன்ற சிவ வழிபாட்டிற்குரிய தினங்களில், சிவன் கோயிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் செய்யும் போது இம்மந்திரத்தை 27 முறை துதித்து ஜெபிப்பதால் கிரக தோஷங்கள் உட்பட அனைத்து தோஷங்களும் நீங்கும். கடுமையான நோய்கள் சிறிது சிறிதாக குணமாகும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவு பெறும்.

எல்லா உலகங்களுக்கும் அதிபதியாக இருக்கும் விஸ்வேஸ்வரனாகிய சிவ பெருமானுக்கு வந்தனம் செய்கிறோம். முக்கண்களை கொண்டவரும், திரிபுரம் எனப்படும் மூன்று லோகங்களுக்கும் தலைவனாக இருக்கும் மகாதேவரே உங்களை வணங்குகிறோம். அனைத்திற்கும் முடிவை வழங்கும் காலமாக இருப்பவரும், உலகை காக்க ஆலகால விஷத்தை பருகிய நீலகண்டர் ஆகியவரும், கொடியதை அழிகின்ற ருத்ர நடமாடி ருத்ரராகவும், சர்வேஸ்வரராகவும் இருக்கும் சிவனை வணங்குகிறேன் என்பதே இதன் பொதுவான பொருளாகும்.

Leave a Reply

Your email address will not be published.