நோய்கள் நீங்க, விருப்பங்கள் நிறைவேற துதிக்க வேண்டிய சிவாஷ்டகம்

சிவாஷ்டகம்

 

ப்ரபும் ப்ராணனாதம் விபும் விஸ்வனாதம் ஜகன்னாத னாதம் ஸதானம்த பாஜாம்
பவத்பவ்ய பூதேஸ்வரம் பூதனாதம், ஸிவம் ஸம்கரம் ஸம்பு மீஸானமீடே
களே ரும்டமாலம் தனௌ ஸர்பஜாலம் மஹாகால காலம் கணேஸாதி பாலம்
ஜடாஜூட கம்கோத்தரம்கை ர்விஸாலம், ஸிவம் ஸம்கரம் ஸம்பு மீஸானமீடே

முதாமாகரம் மம்டனம் மம்டயம்தம் மஹா மம்டலம் பஸ்ம பூஷாதரம் தம்
அனாதிம் ஹ்யபாரம் மஹா மோஹமாரம், ஸிவம் ஸம்கரம் ஸம்பு மீஸானமீடே
வடாதோ னிவாஸம் மஹாட்டாட்டஹாஸம் மஹாபாப னாஸம் ஸதா ஸுப்ரகாஸம்
கிரீஸம் கணேஸம் ஸுரேஸம் மஹேஸம், ஸிவம் ஸம்கரம் ஸம்பு மீஸானமீடே

கிரீம்த்ராத்மஜா ஸம்க்றுஹீதார்ததேஹம் கிரௌ ஸம்ஸ்திதம் ஸர்வதாபன்ன கேஹம்
பரப்ரஹ்ம ப்ரஹ்மாதிபிர்-வம்த்யமானம், ஸிவம் ஸம்கரம் ஸம்பு மீஸானமீடே
கபாலம் த்ரிஸூலம் கராப்யாம் ததானம் பதாம்போஜ னம்ராய காமம் ததானம்
பலீவர்தமானம் ஸுராணாம் ப்ரதானம், ஸிவம் ஸம்கரம் ஸம்பு மீஸானமீடே

ஸரச்சம்த்ர காத்ரம் கணானம்தபாத்ரம் த்ரினேத்ரம் பவித்ரம் தனேஸஸ்ய மித்ரம்
அபர்ணா களத்ரம் ஸதா ஸச்சரித்ரம், ஸிவம் ஸம்கரம் ஸம்பு மீஸானமீடே
ஹரம் ஸர்பஹாரம் சிதா பூவிஹாரம் பவம் வேதஸாரம் ஸதா னிர்விகாரம்
ஸ்மஸானே வஸம்தம் மனோஜம் தஹம்தம், ஸிவம் ஸம்கரம் ஸம்பு மீஸானமீடே

ஸ்வயம் யஃப்ரபாதே னரஸ்ஸூல பாணே படேத் ஸ்தோத்ரரத்னம் த்விஹப்ராப்யரத்னம் ஸுபுத்ரம் ஸுதான்யம் ஸுமித்ரம் களத்ரம் விசித்ரைஸ்ஸமாராத்ய மோக்ஷம் ப்ரயாதி

அகிலமெல்லாம் நிறைந்திருக்கும் சிவபெருமானின் திருவிளையாடல்களை கூறும் அஷ்டகம் இது. இந்த அஷ்டகத்தை தினமும் காலையில் குளித்து முடித்தவுடன் மனதில் சிவபெருமானை நினைத்து வழிபடுவது நல்லது. இந்த அஷ்டகத்தை சிவபக்தியுடன் துதிப்பவர்களுக்கு உடலில் ஏற்பட்டிருக்கும் மருந்துகளால் தீர்க்க முடியாத நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். நினைத்த காரியங்கள், விருப்பங்கள் விரைவில் நிறைவேறும். உடல் மற்றும் மனம் நேர்மறையான ஆன்மீக சக்தியால் நிறையும். மரணம் குறித்த வீணான பயங்கள் நீங்கும். கர்ம வினையின் கடுமை தன்மை குறையும். இம்மந்திர அஷ்டகத்தை சிவனின் வழிபாட்டிற்குரிய திங்கட்கிழமைகள், மாத சிவராத்திரி தினம், பிரதோஷ தினங்கள் போன்ற தினங்களில் துதித்தால் நிச்சய பலன் உண்டாகும்.

உலகில் உள்ள அனைத்திற்கும் முழுமுதற் கடவுளாக இருக்கும் சிவபெருமானை வணங்குகிறேன். கங்கையை தனது தலையில் சூடியவரும், ஜடாமுடி கொண்டவரும், புலித்தோலை தனது ஆடையாக உடுத்தியவரும், பல அசுரர்களையும், துஷ்ட சக்திகளையும் அழித்தவருமான ஈசனின் பாதம் பணிகிறேன். ஆதியும் அந்தமும் இல்லாதவரும், இமயமலையில் வாசம் செய்பவரும், பக்தர்களின் எத்தகைய பாவங்களையும் போக்கி அருளும் கருணையுள்ளம் படைத்தவரான சங்கரரை நான் வணங்குகிறேன் என்பதே இந்த சிவாஷ்டகத்தின் சுருக்கமான பொருளாகும்.

Leave a Reply

Your email address will not be published.