அதிகாலையில் எழுந்திருக்கும் அனைவருக்கும் மிக அற்புதமான ஆற்றல் கிடைப்பதற்கு காரணம் அந்நேரத்தில் அவர்கள் பெறும் சூரியனின் ஒளியே காரணமாக இருக்கிறது. எத்தகைய தீமைகளையும் போக்க கூடிய சக்தி கொண்டவராக இருப்பவர் சூரிய பகவான். ஜாதகத்தில் ஒரு மனிதனின் தந்தை மற்றும் அந்த ஜாதகரின் உடலாரோக்கியம் ஆகியவற்றை தீர்மானிக்கும் கிரகமாக சூரியன் இருக்கிறது. அப்படிபட்ட சூரிய பகவானை துதித்து பல பயன்களை பெறுவதற்கான சூரியனுக்குரிய எளிமையான “ஆதித்ய மந்திரம்” இதோ.
ஆதித்ய மந்திரம்
ஓம் ஆதித்யாய நம
இந்த மந்திரம் ஆதித்யனாகிய சூரிய பகவானின் அருளைப் பெற்று தரும் ஒரு சிறப்பான மந்திரம் ஆகும். இம்மந்திரத்தை எல்லா நாட்களிலும் துதிக்கலாம் என்றாலும் ஒரு வளர்பிறை ஞாயிறு தினத்தன்று காலையில், சூரிய ஹோரை நேரத்தில், கிழக்கு திசை நோக்கி அமர்ந்து, 108 முறை இம்மந்திரம் துதித்து சூரிய பகவானை வணங்கி வந்தால் உடலாரோக்கியம் மேம்படும். ஏற்கனவே உடலில் இருக்கின்ற நோய்களும் சீக்கிரத்தில் தீரும். பதவி உயர்வுகள் வேண்டுபவர்கள் அது கிடைக்க பெறுவார்கள்.
இந்த ஆதித்ய மந்திரத்தை 108 முறைகள் சொல்வதால், நம் ஆன்மப் பிரகாசம் தூண்டப்பட்டு உடலும், மனமும், முகமும் தெளிவுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். மன எழுச்சியினால் ஒருவரின் உள்ளொளி ஆற்றலை அதிகரிக்க செய்து, அவருக்கு பன்மடங்கு நன்மைகளை உண்டாக்கும் மிகவும் ஆற்றல் வாய்ந்த மந்திரமாக இருக்கிறது சூரிய பகவானின் இந்த மந்திரம். இந்த மந்திரத்தை மேலே கூறப்பட்ட முறையில் தொடர்ந்து துதிப்பவர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும்.