துன்பங்கள், துயரங்கள் எல்லாம் மனித வாழ்வில் ஏற்படுவது சகஜமான ஒன்றாகும். இவைகளை சந்திக்காத மனிதனை உலகில் காண்பது மிகவும் அரிதாகும். நமக்கு ஏற்படும் கஷ்டங்கள் நீங்க நம்மை முழுமையாக அறியாத சக மனிதர்களிடம் கூறுவதை விட தெய்வத்திடம் முறையிடுவதையே மெய்யான பக்தர்கள் விரும்புவர். அனைத்தையும் காத்தருளி, உண்மையான பக்தர்களுக்கு வரங்களை அளிக்கும் தெய்வமாக சிவபெருமான் இருக்கிறார். சிதம்பரத்தில் நடராஜராக திருநடனம் புரிகின்ற சிவபெருமானை வழிபட உடனே “பலன் தரும் ஸ்லோகம்” இதோ.
பலன் தரும் ஸ்லோகம்
இதம் கமலஸுந்தரம் ஸதஸி காஞ்சநே ந்ருத்யத
ஸதஞ்சித முதஞ்சிதம் கிமபி குஞ்சிதம் சஞ்சலம்
விசிந்த்ய சிதம்பரே ஹ்ருதயஸம்பதே ஸாஸ்வதம்
விரிஞ்சகரகந்துகம் சரணமிந்து சூடாமணே
ஸிவ ஸிவ சரணம் ஸிவானந்தம்
ஸிவ ஸிவ ஸிவாய ஸிவாய நமஹ
உலகமனைத்தையும் தனது பிரபஞ்ச திருநடனத்தால் இயக்குகின்ற சிதம்பரம் நடராஜ பெருமானை போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 9 முறை அல்லது 27 முறை துதிப்பது சிறந்தது. இந்த ஸ்லோகத்தின் முழுமையான பலனை பெறுவதற்கு மார்கழி மாதத்தில் சிதம்பர நடராஜரின் வழிபாட்டிற்குரிய திருவாதிரை நட்சத்திர தினத்தில் காலை மற்றும் மாலை 27 முறை துதிப்பதால் உங்களின் அனைத்து குறைகள் மற்றும் கஷ்டங்கள் நீங்கி, உங்களின் வாழ்வில் அனைத்து வளங்களையும் சிவனின் அருளால் நிச்சயம் பெறுவீர்கள்.
சிவத்தலங்களில் ஆகாயத் தன்மை கொண்ட கோயிலாக இருப்பது சிதம்பர நடராஜர் கோயிலாகும். இங்கு தனது குஞ்சிதபாதத்தை தூக்கியவாறு சிவன் ஆடும் நடனம் அற்புதமானது. பொன்னம்பலத்தில் உலகங்கள் அனைத்தையும் இயக்கும் ஆனந்த நடனம் புரிகிறார் சிவன். சிவ எனும் இரண்டெழுத்து மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு அனைத்து பாவங்களும் நீங்கி நன்மைகள் உண்டாகிறது என்பதே இந்த ஸ்லோகத்தின் பொதுவான பொருளாகும்.