சுக்கிர பகவான் மந்திரம்
ஓம் க்லீம் ஷும் சுக்ராய நமஹ்
சுக்கிர பகவானின் மிக ஆற்றல் வாய்ந்த மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலை வேளைகளில் 27 முறை மனதில் சுக்கிர பகவானின் உருவத்தை நினைத்தவாறு கூறி வர வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் உங்கள் வீட்டிலிருக்கும் லட்சுமி படத்திற்கு விளக்கேற்றி, இந்த மந்திரத்தை 108 முறை துதித்து வந்தால் நோய்நொடிகள் அண்டாத உடல், நீடித்த ஆயுள், பிறரை உங்களிடம் ஈர்க்கச் செய்யும் முக வசீகரம், தொழில், வியாபாரங்களில் சிறந்த லாபங்கள் போன்றவற்றை அருள்வார் சுக்கிர பகவான்.
செல்வ கடவுளான மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை எவர் மீது படுகிறதோ, அவர்களுக்கு லட்சுமி தேவியின் சார்பாக செல்வம் மற்றும் இன்ன பிற சுகங்களையும் அருள்பவராக சுக்கிர பகவான் இருக்கிறார். மேலே கூறப்பட்டிருக்கும் சுக்கிர பகவானுக்குரிய மந்திரத்தில் வரும் “க்லீம்” சுகங்கள், மனத்திருப்தி, மகிழ்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய ஒரு மந்திர அதிர்வு மிக்க வார்த்தையாகும். சுகங்கள் பலவற்றை பெற நினைப்பவர்கள், சுக்கிர தோஷங்கள் கொண்டவர்கள் மேற்கூறிய மந்திரத்தை தினமும் கூறி வந்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.