பாப வினைகள் நீங்கி, விருப்பங்கள் நிறைவேற செய்யும் சாய் பாபா மந்திரம்

சாய் பாபா மந்திரம்

 

ஓம் ஸர்வ சாக்ஷியை நமஹ

எளிமையின் வடிவாக வாழ்ந்த ஷீர்டி சாய் பாபாவை போற்றும் மந்திர வரி இது. இந்த மந்திரத்தை தினந்தோறும் காலை, மதியம், மாலை என மூன்று வேலைகளும் மனதில் சாய் பாபாவின் திருமுகத்தை நினைத்தவாறு 108 முறை கூறுவது மிகவும் சிறந்ததாகும். மேலும் வியாழக்கிழமைகளில் காலை அல்லது மாலை வேளைகளில் சாய் பாபாவிற்கு மிகவும் பிடித்த கற்கண்டுகள், முந்திரி, பாதாம் பருப்புகள், பழங்கள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை நிவேதனமாக வைத்து மேற்கூறிய மந்திர வரியை 108 முறை துதித்து வந்தால் உங்களின் பற்றியிருக்கும் பாவ வினைகள் நீங்கி, நன்மைகள் ஏற்படும். உங்களின் நியாயமான கோரிக்கைகள் விருப்பங்கள் போன்றவற்றை நிறைவேற்றுவார் சாய் பாபா.

கிட்டத்தட்ட அறுபது ஆண்டு காலம் ஷிர்டியிலேயே வசித்து வந்தவர் சாய் பாபா. அந்த ஊரில் பாபா தங்கியதன் மூலம் ஷீர்டி மண் புனித பூமியாக லட்சக்கணக்கான சாய் பாபாவின் பக்தர்களுக்கு மாறி போனது. பக்தர்களின் குறைகள் அனைத்தையும் பாபா தீர்த்த போது, மக்கள் அனைவரும் அவரை இறைவன் என்று புகழ்ந்த போதும், இறைவன் மிகவும் உயரியவன் நான் அவனது சேவகன் மட்டுமே என்று கூறிய அவரது தன்னடக்கத்திற்கு ஈடு இணையில்லை. அவரை வழிபடுபவர்களுக்கு நன்மைகள் அனைத்தும் ஏற்படும் என்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published.