துதி பாடல் :
துணையும் தொழுந்தெய்வமும் பெற்றதாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் பனி மலர்ப்பூங்
கணையும், கரும்புச்சிலையும், மென்பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுரசுந்தரீ ஆவது அறிந்தனமே!
“அபிராமி பட்டர்” இயற்றிய “அபிராமி அந்தாதியின்” இப்பாடலை தினமும் காலையில் எழுந்து மனதில் அபிராமி அம்மனை நினைத்து 9 முறை பாடவேண்டும். மேலும் வெள்ளிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு அம்மன் கோவிலுக்குச் சென்று பாட வேண்டும். அப்படி கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலுள்ள துளசி மாடத்திற்கு முன்பு தீபமேற்றி இப்பாடலை 9 முறை பாடி வழிபட பிரிந்த உறவினர்களும் மற்றும் பிரிந்து வாழ்ந்த தம்பதிகளும் மீண்டும் ஒன்றிணைவர்.