திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம் :
“ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ
சுக்ர பிரசோதயாத்”
காதலில் வெற்றிபெற மந்திரம்:
“சுக்கிரமூர்த்தி சுகமிகு ஈவாய் வக்கிரமின்றி வரமிகுந்தருள்வாய்
வெள்ளிச்சுக்கிர வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க் கருளே”.
முதல் மந்திரத்தை திருமணமாகி மனப் பிணக்குகள் ஏற்பட்டு பிரிந்து வாழும் தம்பதிகள், ஆண் பெண் இருவரும் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவான் சந்நிதிக்குச் சென்று, கற்கண்டுகளை நிவேதனம் வைத்து 108 முறை துதித்து வழிபட தம்பதிகள் கூடிய விரைவில் ஒன்றிணைவர் .
மேற்கூறியவற்றில் இரண்டாவது “சுக்கிர துதி” மந்திரத்தை காதல் விவகாரங்களில் வெற்றியடைய, வெள்ளிக்கிழமைகளில் மஹாலக்ஷ்மி கோவிலுக்கு சென்று அதெய்வத்தை வணங்கி 108 முறை துதித்து வர வேண்டும். பரிகாரமாக பசுமாட்டிற்கு பழம் அல்லது அகத்திக்கீரையை கொடுக்க வேண்டும்.