புதன் கிழமைகளில் இந்த மந்திரத்தை ஜபித்தால் வெற்றி தேடி வரும்

“பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” என்று புதன் கிரகத்தின் நற்தன்மையை நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அப்படியான சிறப்பு கொண்ட புதன் கிழமை அன்று எக்காரியத்தையும் தொடங்கிச் செய்வது நல்லப் பலன்களைக் கொடுக்கும். பொதுவாக எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்பு அதில் வரவிருக்கும் விக்னங்களைப் போக்க விநாயகப்பெருமானை வணங்குவது நமது மரபு. அவ்விநாயகப் பெருமான் நாம் முன்னெடுக்கும் காரியங்களில் சிறப்பான வெற்றியைக் கொடுப்பதற்கான மந்திரம் தான் இது.

மந்திரம் :
“ஓம் ஷ்ரீம் கம் சவுபாக்ய கண்பதேயே
வர்வர்தா சர்வஜன்மா மைன் வஷமான்ய நமஹ”

இந்த மந்திரத்தை புதன் கிழமைகளில் அருகிலுள்ள ஆலயம் சென்று விநாயகர் சந்நிதி முன்போ, ஆலயம் செல்ல முடியாதவர்கள் வீட்டிலுள்ள விநாயகர் படத்திற்கு முன்பு நின்று தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி, பழம், பால், மலர் போன்ற ஏதேனும் ஒன்றை நிவேதனம் வைத்து 108 முறை இம்மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். இப்படிச் செய்து வர நீங்கள் விரும்பியக் காரியங்கள் அனைத்தும் விநாயகப்பெருமானின் அருளால் வெற்றியடையும்.

Leave a Reply

Your email address will not be published.