பூணூல் மாற்றும் போது கூறவேண்டிய யக்னோபவீதம் மந்திரம்

பூணூல் என்பது இந்து மதத்தில் கூறப்படும் அனைத்து சாத்திர மற்றும் சம்பிரதாயங்களை முறைப்படி கடைபிடிக்கும் எக்குலத்தினரின் ஆண்களும் அணிந்து கொள்ளக்கூடிய ஒரு ஆன்மீக சக்தி மிகுந்த நூலாகும். இதை அணிவதற்கு/ மாற்றுவதற்கு சிறந்த தினம் ஆவணி அவிட்டம் தினமாகும். இந்த தினத்தில் காலையிலேயே எழுந்து நீராடி, புதிய பூணூலை எடுத்து முடிபோட்டு ஒரு பஞ்சபாத்திரத்தில் நீரை எடுத்துக்கொண்டு கீழ்கண்ட முறைகளில் யக்னோபவீத மந்திரங்களை கூற வேண்டும்.

ஆசமனம்: ஒம் அச்யுதாய நம: ஒம் அனந்தாய நம: ஒம் கோவிந்தாய நம:

விக்னேச்வர த்யானம்:

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே

ப்ராணாயாமம்;

ஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் – என்று வலது காதைத் தொடவேண்டும்.

ஸங்கல்பம் மந்திரம்,

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், ச்’ரௌதஸ்மார்த்த, விஹிதஸதாசார, நித்யகர்மானுஷ்டான, யோக்யதாஸித்தயர்த்தம், ப்ரஹ்மதேஜ: அபிவ்ருத்யர்த்தம், யஜ்ஞோபவீத்தாரணம் கரிஷ்யே.

என்று ஜலத்தை தொட்டு

யஜ்ஞோபவீத்தாரண மஹா மந்த்ரஸ்ய, பரப்ரஹ்ம ரிஷி: என்று தலையில் தொட்டு

த்ருஷ்டுப் சந்த: என்று மூக்கு நுனியில் தொட்டு

பரமாத்மா தேவதா:என்று மார்பில் தொட்டு

யஜ்ஞோபவீத்தாரண விநியோக:

என்று பூணுல் முடிச்சு வலது உள்ளங்கையில் மேலே இருக்கும் படியும் இடது கை ஜலமிருக்கும் பஞ்ச பாத்திரத்தில் வைத்துக் கொண்டு

யஜ்ஞோபவீதம், பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத்,ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சு’ப்ரம், யஜ்ஞோபவீதம் பலமஸ்துதேஜ: ஒம்

என்று கூறி புதிய பூணுலைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

பிரம்மசாரிகள் 1பூணுல், திருமணம் ஆனவர்கள் 2 பூணுல் பெரியோர்கள் 3 பூணுல் எண்ணிக்கையில் அணிந்து கொள்ள வேண்டும். சில குலத்தினருக்கு மூன்று முடி பூணுல் அணிந்து கொள்ளும் பழக்கம் உள்ளது.

ஆசமனம்: உபவீதம் பின்னதந்து ஜீர்ணம் கஸ்மல துஷிதம் விஸ்ருஜாமி ப்ரஹ்ம வர்ச்ச: ஜலேஸ்மின் தீர்க்காயுரஸ்துமே ஒம்

என்று ஜெபித்து பழைய பூணுலைக் கழற்றி வடதிசையிலோ அல்லது ஜலத்திலோ போட வேண்டும். இதன் பிறகு மீண்டும் ஆசமனம் செய்யவும், பிரம்மச்சாரிகள் இடுப்புக்கயிறு, தண்டம்-மந்திரம் சொல்லி அணிய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.