பெண்களே! உங்களுடைய பேச்சுக்கு, உங்கள் வீட்டில் கொஞ்சம் கூட மரியாதையே இல்லையா? இனி உங்கள் பேச்சுக்கு எல்லோரும் தலையாட்டுவாங்க. இப்படி மட்டும் பண்ணி பாருங்க!

நாம், எல்லோருடைய வீடுகளிலுமே இருக்கக்கூடிய பெரிய பிரச்சனை, நல்லது கெட்டதை யார் சொல்லியும், யாரும் கேட்கப் போவது இல்லை. அவரவர் இஷ்டப்படி தான் அவரவர் வாழ்க்கையை நடத்தி செல்கிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் சொல்கின்ற வார்த்தைகளுக்கு சில வீடுகளில் மதிப்பே இருக்காது. கணவன், மனைவி பேச்சை காது கொடுத்து கேட்க மாட்டார். மாமியார், மருமகள் சொல்கின்ற பேச்சை திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள். மருமகள் மாமியார் சொல்வதை கேட்கவேண்டும் என்று கூட நினைக்க மாட்டார்கள். குழந்தைகள் அம்மா சொல்லுகின்ற பேச்சை சுத்தமாக கேட்க மாட்டார்கள்.

இப்படியாக பெண்ணாகப் பிறந்தவர்கள், அனைவராலும் உதாசீனப்படுத்தும் நிலைமை சில இடங்களில் ஏற்படுகிறது. சில வீடுகளில் இது தலைகீழாக நடக்கும். ஆண்கள் பேசுவதற்கான வாய்ப்பே சில வீடுகளில் இருக்காது. அதையும் இந்த இடத்தில் நாம் சொல்லியே ஆக வேண்டும் அல்லவா. பெண்களுடைய வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்க வேண்டுமென்றால், பெண்கள் சொல்லுகின்ற விஷயங்களையும் ஒரு வீட்டில் கேட்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஒரு வீட்டில் இருக்கக்கூடிய அந்த குடும்பத் தலைவியின் பேச்சை, அந்த குடும்ப உறுப்பினர்கள் கேட்க வேண்டுமென்றால் அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு, நாம் சில விஷயங்களை தெரிந்து கொள்வோம். முதலாவதாக, இந்த பரிகாரத்தை ஆண்கள் செய்ய முடியாது. இந்தப் பரிகாரத்தை பெண்களே செய்தாலும், தவறான முறையில் அடுத்தவர்களை தன்வசப்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதற்காகவோ, அடுத்தவர்களை கெட்ட நோக்கத்துக்கு பயன்படுத்துவதற்காகவோ இந்த பரிகாரமும் இந்த மந்திரமும் என்றைக்கும் துணை நிற்காது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. நல்ல எண்ணத்தோடு, நல்லதுக்காக மட்டுமே இந்த பரிகாரத்தை பிரயோக படுத்த முடியும்.

சரி, பரிகாரத்திற்கு செல்லலாம். பெண்கள் சமையலறையில் சமைக்கின்ற சோப்பிற்கு மற்றவர்களை தன்வசப்படுத்தும் தன்மை உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. பெண்கள் அந்த சோம்பினை சமையலில் சேர்ப்பதற்கு முன்பாக, உங்களுடைய மனதில் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

‘ஓம் நமோ பால மோகினி சர்வமும்
மம மம வசம் குறுகுறு ஸ்வாகா!’.

mohini

மோகினி தேவதையை மனதார வேண்டிக்கொண்டு சொல்லப்படும் மந்திரம் தான் இது. இந்த மந்திரத்தை சொல்லி உங்கள் கைகளால், உங்கள் சமையலறையில் இருக்கும் சோம்பை எடுத்து, சமையலில் சேர்த்து சமைத்து விடுங்கள். இந்த மந்திரத்தைச் சொல்லி விட்டு, சோம்பு சேர்த்து சமைத்த, அந்த சமையலை உங்கள் வீட்டு குடும்ப உறுப்பினர்கள் சாப்பிட்டால், அதன் பின்பு நீங்கள் சொல்லும் நல்ல விஷயங்களுக்கு கட்டாயம், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் செவி சாய்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (அனுசரித்து, ஆதரித்து செல்வது தான் பெண்களின் இயல்பு குணமாக இருக்க வேண்டும். தவிர, அடுத்தவர்களை ஆட்டி வைப்பதற்கு இந்த மந்திரம் என்றுமே துணை போகாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.)

women4

சரிங்க, சிலருக்கு இந்த மந்திரம் எல்லாம் உச்சரிக்கத் தெரியாது. உங்கள் அக்கம் பக்கம் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ரொம்ப கஷ்டமான சூழ்நிலை. அந்தப் பெண்ணை மதிப்பதற்கு ஒரு ஈ காக்கா கூட இல்லை. அவளுடைய வார்த்தைக்கு, அவளுடைய வீட்டில் சுத்தமாக மரியாதையே இல்லை என்று வைத்துக் கொள்வோம். ரொம்ப கஷ்டப்படுற பெண்ணுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால், அவர்களுக்கும் இதைச் சொல்லுங்கள்.

women

மோகினி தேவதையை மனதார நினைத்து கொண்டு, ‘என்னுடைய வார்த்தையை என் குடும்ப உறுப்பினர்கள் கேட்க வேண்டும், என்னுடைய வார்த்தைக்கு மரியாதை கிடைக்க வேண்டும், என்ற வேண்டுதலை வைத்து,’ சோம்பை எடுத்து சமையலில் சேர்த்து, சமைத்து, அந்த சமையலை குடும்ப உறுப்பினர்களை சாப்பிட வைத்தால் கூட போதும். கட்டாயம் அந்த பெண்ணின் வார்த்தைக்கு அவளுடைய வீட்டில் மரியாதை கிடைக்கும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published.