மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்

பிரபஞ்சத்தில் அனைத்துமே சிவசக்தி தத்துவத்தின் அடிப்படையில் தான் இயங்குகிறது. உலகமனைத்தும் இயங்குவதற்கு சக்தியாக இருப்பது அன்னை பராசக்தி ஆவார். சக்தி தேவியை வழிபடும் முறை சக்தி உபாசனை எனப்படும். தேவியை பல்வேறு பெயர்கள் கொண்டு அவர்களின் பக்தர்கள் வழிபடுகின்றனர். வாழ்க்கையில் பல நன்மைகளை பெற விரும்பும் மக்களுக்கு அருளும் “மங்கள சண்டிகா” தேவியின் ஸ்தோத்திரம் இதோ.

MathuraKaliamman

மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்

ரட்ச ரட்ச ஜகன்மாதா: தேவி மங்கள சண்டிகே
ஹாரிகே விபதாம் ராசே ஹர்ஷ மங்கள காரிகே
ஹர்ஷ மங்கள தட்ச ஹர்ஷ மங்கள தாயிகே
சுபே மங்கள தசேக்ஷ சுபே மங்கள சண்டிகே
மங்களே மங்களார்ஹேச ஸர்வ மங்கள மங்களே
ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே

பூஜ்யே மங்கள வாரேச மங்களா பீஷ்ட தேவதே
பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்
மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களானாம் சு மங்களே
ஸம்ஸார மங்களாதாரே மோக்ஷ மங்கள தாயினி
ஸாரேச மங்களாதாரே பாரேச ஸர்வ கர்மணாம்
ப்ரதி மங்கள வாரேச பூஜ்யே மங்கள ஸுகப்ரதே

amman

மங்களங்கள் பலவற்றை அள்ளித்தரும் மங்கள சண்டிகா தேவியை போற்றும் ஸ்தோத்திரம் இது. செவ்வாய்கிழமைகள் பொதுவாக தேவி வழிபாட்டிற்குரிய சிறந்த தினமாகும். ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளிலும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், பூஜையறையில் அம்பாள் படத்திற்கு முன்பு தீபமேற்றி, மலர்களை சமர்ப்பித்து, ஏதேனும் பழத்தை நைவேத்தியமாக வைத்து இந்த ஸ்தோத்திரத்தை உளமார படிப்பதால் குழந்தை பேறில்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டில் எப்போதும் மங்களங்கள் நிறைந்திருக்கும். சகல சம்பத்துகளும் பெருகிக்கொண்டே செல்லும்.

இந்த உலகத்தைக் காத்து அருள்கின்ற தாயே, ஆபத்துகள் வராமல் காத்து நிற்பவளே, ஆபத்துக்கள் வந்துவிட்டாலும் அகற்றுபவளே, மங்கள தினமான செவ்வாய்க்கிழமை தோறும் வணங்கத் தக்க மங்கள உருவானவளே, இந்த உலகின் மங்களத்திற்கு மூலகாரணமாய் விளங்குபவளே, எல்லா நிலைகளிலும் மங்களத்தைத் தருபவளே, புண்ணியம், பாவம் ஆகியவற்றைக் கடந்து நிற்பவளே; ஒவ்வொரு மங்கள வாரத்திலும் எனக்கு எல்லாவிதமான மங்களத்தையும் அளித்துக் காத்து அருள்வாயாக என்பதே இந்த ஸ்தோத்திரத்தின் பொதுவான பொருளாகும்.

Leave a Reply

Your email address will not be published.