மனக்கவலை நீக்கி மகிழ்ச்சியை அருளும் சாய்பாபா மந்திரம்

நம் வாழ்வு ஏற்ற, இறக்கங்கள் நிறைந்தது. நாம் என்ன முயற்சி செய்தாலும் நம் வாழ்வில் வசந்தம் வீசவில்லை, மகிழ்ச்சி ததும்பவில்லை என பலர் புலம்புவதைப் பார்த்திருப்போம்.

இறைவனுக்கான சில மந்திரங்கள் நம் மன கவலைகளை நீக்கி, மகிழ்ச்சியை தரக்கூடியதாயிருக்கும். அதில் முக்கியமானது சாய்பாபாவின் முக்கிய மந்திரம்.

இந்த மந்திரத்தை நாம் தினமும் ஜெபித்தால் நம் மன கவலை நீங்கும் என்பது ஐதீகம்.

மந்திரம்:ஓம் சாய் குருவாயே நமஹ ஓம் ஷீரடி தேவாயே நமஹ ஓம் சர்வ தேவ ரூபாயே நமஹ

 

இந்த மந்திரத்தை நாம் தினமும் காலையில் நீராடிவிட்டு இறைவனை வணங்கிய பின்னர், ‘ஸ்ரீ சாய்பாபா’வை வணங்கி அவரின் திரு உருவத்தின் முன் இந்த மந்திரத்தை தினமும் 9 முறை கூற வேண்டும்.

வியாழக்கிழமைகளில் சாய்பாபா கோயிலில் அல்லது வீட்டிலேயே அவரின் திரு உருவம் முன் நின்று வணங்கி, முந்திரி பருப்பு அல்லது கற்கண்டு நிவேதனமாக வைத்து பூஜிக்க வேண்டும்.

அதன் பின்னர் இந்த மந்திரத்தை 108 முறை பக்தியுடன் ஜெபித்து வாருங்கள். இதனால் உங்களின் மனதில் இருக்கும் ஒரு இனம் புரியாத பயம் நீங்கும். உங்களின் மனக்கவலை நீங்கி உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் மன மகிழ்ச்சி உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published.