ஸ்ரீ ராமர் மந்திரம்:
ஸ்ரீ ராம் ஜெய ராம் சுந்தர ராம்
இம்மந்திரத்தை வாரத்தின் எல்லா நாளும் கூறி “ஸ்ரீ ராமரை” வழிபடலாம் என்றாலும், சனிக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பானதாகும். இந்நாளில் குளித்து முடித்த பின்பு, அருகிலுள்ள ஸ்ரீ ராமரின் கோவிலுக்கோ அல்லது பெருமாள் கோவிலுள்ள ஸ்ரீ ராமரின் சந்நிதியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, இம்மந்திரத்தை 108 முறையோ அல்லது 1008 முறையோ கூறி வழிபடுவதால் மிகுந்த மனோபலம் மற்றும் எந்த ஒரு சூழ்நிலையிலும் மனம் கலங்காமல் வாழ்க்கையை எதிர் கொள்ளும் பலத்தை ஸ்ரீ ராமர் வழங்குவார். மேலும் இம்மந்திரத்தில் “சுந்தர” என்ற வார்த்தை ஸ்ரீ ஆஞ்சநேயரை குறிப்பதால் சனி பகவானின் கெடுபலன்களை நீக்கும்.
அதே போல ஸ்ரீ ராம ஜெயம் என்னும் ராம மந்திரத்தை எழுதுவோருக்கு தங்கள் செய்யும் அனைத்திலும் வெற்றி உண்டாகும். ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை சொன்னாலும் அதே பலன் உண்டு.