“செய்யும் தொழிலே தெய்வம்” என்பது தமிழ் பழமொழியாகும். ஒரு மனிதன் இந்த உலகில் வாழ தனது உடலுழைப்பை கொண்டு பொருளீட்டுதல் அவசியமாகிறது. இப்படி பலவகையான தொழில், வியாபாரங்களில் பலகோடி மக்கள் ஈடுபட்டு பொருளீட்டுகின்றனர். இவர்களில் பலருக்கும் தங்களின் தொழில் நடத்தும் இடங்களில் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்படுக்கொண்டே இருக்கும் நிலை இருக்கிறது. மேலும் தங்களின் வீடுகளில் வீண் பொருள் விரையம் ஏற்பட்டு பல கஷ்டங்களை உண்டாக்குகிறது இதையெல்லாம் போக்கும் முருகன் ஸ்தோத்திரம் இதோ.
முருகன் ஸ்தோத்திரம்
அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே
வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி
வீர வடிவேலனாகிய முருகப்பெருமானின் பெருமையை கூறும் தமிழ் ஸ்தோத்திரம் இது. இந்த ஸ்தோத்திரத்தை வெள்ளிக்கிழமைகளில் மட்டும் துதிப்பதது சிறப்பானதாகும். வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, உங்கள் வீட்டின் பூஜையறையில் இருக்கும் முருகபெருமான் படத்திற்கு வாசமுள்ள மலர்களை சாற்றி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றிய பின்பு இந்த ஸ்தோத்திரத்தை 27 முறை அல்லது 108 முறை துதிப்பதால் உங்கள் தொழில், வியாபார இடங்களில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். வீட்டில் வீண் பொருள் விரயங்கள் ஏற்படாது. பொருளாதார நிலை உயரும்.
உலகையெல்லாம் கட்டி காக்கும் ஈசனாகிய சிவபெருமான் அரக்கர்களிடமிருந்து தேவர்களை காக்க தனது யோக சக்தியால் உருவாக்கிய தெய்வம் தான் முருகப்பெருமான். ஆறு நட்சத்திரங்களாக தோன்றி, ஆறு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு, கார்த்திகேயன் எனவும் ஆறுமுகம் ஆகிய பெயர்களை பெற்றார் குறிஞ்சி நில தெய்வமாகிய முருகன் அவரை மேற்கூறிய தமிழ் ஸ்தோத்திரம் துதித்து வழிபடுவதால் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.