பணம் மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது என்பது உண்மை. ஆனால் அடுத்த நொடி என்ன நடக்கும் என்று தெரியாத இந்த உலகத்தில் நாம் சேர்த்து வைக்கும் பணம் தான் நமக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை தரும் என பலரும் பணம் சம்பாதிக்கவும் சேர்க்கவும் செய்கின்றனர். நாம் செய்கிற தொழில், வியாபாரங்களில் நல்ல லாபங்கள் ஏற்பட பலரும் வழிபாடும் தெய்வமாக இருப்பவர் கலியுக கடவுளான திருப்பதி – திருமலை வெங்கடாசலபதி ஆவார். அவரை வழிபடுவதற்கான “திருமால் மந்திரம்” இதோ.
திருமால் மந்திரம்
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம்
ஓம் நம ஸ்ரீ வேங்கடேசாய
திருப்பதி திருமலையில் கோயில் கொண்டிருக்கும் வெங்கடேச பெருமாளை போற்றும் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு முதலில் விநாயகரையும், குலதெய்வத்தையும் மனதார வணங்கி விட்டு, மேற்கூறிய மந்திரத்தை 108 முறை துதித்து பலன் அதிகம். திங்கட்கிழமைகள், மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திர தினத்தில் அதிகாலையில் எழுந்து 108 முதல் 1008 மந்திர உரு துதிப்பதால் வாழ்வில் நன்மையான விடயங்கள் அதிகம் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் லாபம் பெருகும். உங்களின் பொருளாதார நிலை பலம் பெறும் வீண் செலவுகள் ஏற்படாது.
கலியுக கடவுள் என போற்றப்படுபவர் திருப்பதி திருமலையில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீனிவாசன் ஆவார். எந்த ஒரு மனிதனுக்கும் செல்வ வளத்தை அருளும் கருணை கொண்டவர் வேங்கடவன். அவரை தினமும் வழிபடும் பக்தர்களின் வாழ்வில் பல நல்ல மாறுதல்கள் ஏற்படுவதை நாம் காண முடியம். இந்த திருப்பதி ஏழுமலையான் நவகிரகங்களில் சனீஸ்வரர் அம்சம் கொண்டவராகவும் இருப்பதால் அவரை தொடர்ந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் ஏற்படும் அனைத்து கஷ்டங்களும் நீங்கும்.