ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் காயத்ரி மந்திரம்:
ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி:
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்!
இவ்வுலகில் வாழும் மனிதர்களின் நலனுக்காக அஷ்ட லட்சுமிகள் தங்களது சக்தியின் மூலம் மனிதர்களுக்கு செல்வ வளத்தை தந்தருள்புரிகின்றனர். ஆனால் அவர்களின் சக்தி அவ்வவ்போது குறைவதால், அந்த குறைபாட்டை சரி செய்ய தேய்பிறை அஷ்ட நாட்களில் வரும் ராகு காலத்தில் அஷ்ட லட்சுமிகள் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுகிறார்கள் என்று நம்பப்படுகிறது.
மனிதர்களாகிய நாமும் தேய்பிறை அஷ்ட நாட்களில் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுவதன் மூலம் நமக்கு குறைவில்லாத செல்வம் கிடைக்கும். ஸ்ரீஆகர்ஷண பைரவரை வழிபடும் சமயத்தில் மேலே உள்ள அவருக்குரிய காயத்ரி மந்திரம் அதை ஜபித்து வழிபடுவது நல்லது.