வாழ்க்கையை வளமாகும் தீபலட்சுமி மந்திரம்

தீபலட்சுமி மந்திரம்

 

அந்தர்க்ருஹே ஹேமஸுவேதிகாயாம் ஸம்மார்ஜநாலேபநகர்ம க்ருத்வா
விதாநதூபாதுலபஞ்சவர்ணம் சூர்ணப்ரயுக்தாத்புதரங்கவல்யாம்
அகாதஸம்பூர்ணஸரஸ்ஸமாநே கோஸர்பிஷாபூரிதமத்யதேஸே
ம்ருணாலதந்துக்ருதவர்த்தியுக்தே புஷ்பாவதம்ஸே திலகாபிராமே

பரிஷ்க்ருதஸ்தாபிதரத்நதீபே ஜ்யோதிர்மயீம் ப்ரஜ்ஜ்வலயாமி தேவீம்
நமாம்யஹம் மத்குலவ்ருத்திதாத்ரீம ஸௌதாதி ஸர்வாங்கணஸோப மாநாம்
போ தீபலக்ஷ்மி ப்ரதிதம் யஸோ மே ப்ரதேஹி மாங்கல்யமமோகஸீலே
பர்த்ருப்ரியாம் தர்மவிஸிஷ்டஸீலாம் குருஷ்வ கல்யாண்யநுகம்பயா மாம்

யாந்தர்பஹிஸ்சாபி தமோபஹந்த்ரீ ஸந்த்யாமுகாராதிதபாதபத்மா
த்ரயீஸமுத்கோஷிதவைபவா ஸா ஹ்யநந்யகாமே ஹ்ருதயே விபாது
போ தீப ப்ரஹ்மரூபஸ்த்வம் ஜ்யோதிஷாம் ப்ரபுரவ்யய:
ஆரோக்யம் தேஹி புத்ராம்ஸ்ச அவைதவ்யம் ப்ரயச்சமே

ஸந்த்யாதீபஸ்தவமிதம் நித்யம் நாரீ படேத்து யா
ஸர்வஸௌபாக்யயுக்தா ஸ்யால்லக்ஷ்ம்யநுக்ரஹதஸ்ஸதா
ஸரீராரோக்யமைஸ்வர்யமரிபக்ஷக்ஷயஸ்ஸுகம்
தேவி த்வத்த்ருஷ்டித்ருஷ்டாநாம் புருஷாணாம் ந துர்லபம்
இதி தீபலக்ஷ்மீ ஸ்தவம் ஸம்பூர்ணம்

செல்வத்தையும், நல்வாழ்வையும் அருளும் தீபலட்சுமி தேவியின் துதி இவை. இந்த துதிகளை வாரந்தோறும் வரும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் லட்சுமி படத்திற்கு முன்பு விளக்கேற்றி, மனமுருக துதித்து வருவது நல்லது. வரலட்சுமி விரதம், தீபாவளி போன்ற விழாநாட்களில் காமாட்சி விளக்கில் விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி இந்த மந்திரங்களை துதித்து வந்தால் குடும்பத்தில் சுபிட்சங்கள் பெருகும். பணப்புழக்கம் அதிகமாகும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் உண்டாகும். புதிய பொன் நகைகள், சொத்துகள் வாங்கும் யோகமும் ஏற்படும்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் என்கிற மும்மூர்த்திகளில் உலகில் வாழும் மக்களுக்கு வாழ்க்கையையும்,அந்த வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் தருபவர் திருமால் எனப்படும் மகாவிஷ்ணு ஆவார். அந்த திருமாலின் இதயத்தில் வாசம் செய்பவள் தான் செல்வமகளான லட்சுமி தேவி. திருமாலின் இதயத்தில் வாசம் புரிவதால் அவள் திருமகள் எனவும் அழைக்கப்படுகிறாள். இந்த திருமகளின் கடைக்கண் பார்வை எவர் மீது படுகிறதோ அவருக்கு செல்வ வளமிக்க வாழ்வும், வசதிகளும் உண்டாகும்

Leave a Reply

Your email address will not be published.