[og_img]
கோடி ரூபாய் பணம் இருந்தும், காசு இருந்தும் ஒரு நிமிடம் கூட மனநிம்மதி இல்லாமல் வாழும் மனித உயிர்கள் இந்த உலகத்தில் எத்தனையோ இருக்கிறது. ஆகவே என்னிடம் பணம் காசு நிறைய இல்லை, என்று நினைத்து நினைத்து கவலைப்படாதீங்க. நிம்மதியான வாழ்க்கை இருக்கும் பட்சத்தில் பணம் காசு சுலபமாக சம்பாதித்துக் கொள்ளலாம். மன நிம்மதியோடு சந்தோஷமாக வாழ வேண்டுமா. முதலில் எதை நினைத்தும் அதிகமாக யோசிக்காதீங்க. நடந்தது நடந்து விட்டது. நடந்து முடிந்ததை பற்றி சிந்தனை கூடவே கூடாது. நிறைய யோசித்தால் நிம்மதியாக வாழ முடியாது.
இரண்டாவது உங்களை யாராவது ஒதுக்கி வைக்கிறார்கள். அவமானப்படுத்துகிறார்களா. அவர்களை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அவர்களை விட்டு நீங்கள் ஒதுங்கி நிற்க வேண்டும். மூன்றாவது, சில நேரத்துல சில இடங்களில் நாம் இருப்பது அவ்வளவு சரியாக இருக்காது. அப்படி இருக்கும்போது அந்த இடத்தை விட்டு வெளியேறி விடுங்கள். இது உங்களுக்கு அந்த சமயத்தில் கஷ்டம் தரக்கூடிய விஷயமாக இருந்தாலும், அடுத்து வரக்கூடிய சில நாட்களில், நீங்கள் முன்பு எடுத்த முடிவு சரிதான் என்று உங்களுக்கே தெரியும். இந்த மூன்று விஷயங்களையும் பின்பற்றும்போது உங்களுடைய வாழ்க்கை எளிமையாக மாறும்.
அடுத்தபடியாக சில பேர் கடவுளை திட்டிகொண்டே இருப்பார்கள். என்னுடைய வாழ்க்கை மிகவும் சோகமாக இருக்கிறது. கடவுள் இருக்கிறானா இல்லையா என்று எனக்கு தெரியாது. அவன் எனக்கு பெரியதாக என்ன செய்து விட்டான். என்றெல்லாம் கடவுளை தவறாக பேசக்கூடிய வழக்கம் உங்களிடத்தில் இருந்தால், அதை இன்றோடு நிறுத்திக் கொள்ளுங்கள். காரணம் இல்லாமல் கடவுள் எதையுமே செய்ய மாட்டான். இன்னைக்கு உங்களுக்கு இந்த கஷ்டம் இருக்குன்னா அதுக்கு பின்னால் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று தான் அர்த்தம். ஆக இறைவனின் பாதங்களை சரணடைவது மன நிம்மதியை கொடுக்கும்.
அதிலும் குறிப்பாக முருகரின் வழிபாடு நமக்கு உடனடியாக நல்லதொரு வாழ்க்கையை கொடுத்து விடும். நிம்மதியை கெடுக்கக்கூடிய எந்த சூழலையும் மாற்றக்கூடிய சக்தி இந்த முருகர் வழிபாட்டிற்கு உண்டு. வேல் வழிபாட்டிற்கு உண்டு. உங்களுடைய வீட்டில் முருகனின் திருவுருவப்படம் இருந்தாலும் சரி வேல் இருந்தாலும் சரி, இந்த வழிபாட்டை செய்யலாம்.
வாரம் ஒரு நாள் செவ்வாய்க்கிழமை காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் இந்த வழிபாடு செய்யலாம். தினமும் இந்த மந்திரத்தை சொன்னாலும் தவறு இல்லை. முருகப்பெருமானை பார்த்து நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள். முருகப்பெருமானை பார்த்த உடனேயே உங்களுக்கு மனதில் தெளிவு பிறக்கும். இரண்டு விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். முருகப்பெருமானின் முன்பு அமருங்கள். முருகப்பெருமானின் இந்த மூலம் மந்திரத்தை உங்களால் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை சொல்லி விடுங்கள். நீங்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரம் இதோ.
ஓம் சௌம் சரவணபவ
ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ!