வாழ்வில் சுக்கிர யோகம் பெற்று செல்வ செழிப்போடு வாழ வளர்பிறை வெள்ளிக்கிழமையில் இதை மட்டும் செய்துவந்தால் போதும்.

பலவிதமான சுகங்களை அனுபவிக்கும் வாழ்க்கையைத்தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால் அனைவருக்கும் அத்தகைய வாழ்வு அமைந்து விடுவதில்லை. ஜோதிட சாஸ்திர அடிப்படையில் பார்க்கும் பொழுது ஒரு நபருக்கு சுகமான வாழ்க்கை உண்டாக, அவரின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுப் பெற்று இருக்க வேண்டும். ஆனால் சிலருக்கு அவர்களின் ஜாதகத்தில் சுகங்களுக்கு அதிபதியான சுக்கிர பகவான் பகை, நீச்சம் போன்ற தன்மைகளை அடைந்து ஜாதகருக்கு சுகக் குறைவு ஏற்படுத்தி, போராட்டமான வாழ்க்கையை தந்துவிடுவார். அப்படி ஜாதகத்தில் சுக்கிர கிரகத்தால் பாதகமான பலன்களை பெறுபவர்களும் சிறப்பான நற்பலன்களை பெற சித்தர்கள் அருளிய இந்த எளிய மந்திரம் குறித்து இங்கே நாம் தெரிந்து கொள்ளலாம்.

sukkiran

சுகங்களுக்கு அதிபதி சுக்கிரன் என்பது ஜோதிட சாஸ்திர நியதி. பொதுவாக ஜாதகத்தில் குருபகவான் மட்டுமே முழுமையான சுப கிரகம் என கருதப்படுகிறார். அதே நேரம் சுக்கிர பகவான் பாபக் கிரகமாக கருதப்படுகிறார். எனினும் சுபகிரகமான குரு பகவானை காட்டிலும் சுகபோகமான வாழ்வை கொடுக்கும் ஆற்றல் சுக்கிரனுக்கு அதிகம் உண்டு. அத்தகைய சுக்கிர பகவானுக்குரிய அருளை பெறுவதற்கு சித்தர்களால் இயற்றப்பட்ட அற்புதமான சுக்கிர தமிழ் மந்திர துதி இதோ.

சுக்கிர பகவான் மந்திரம்
ஓம் அசுரமந்திரியே, அருட்ஜோதியே, பிரசுரா, பிரகுசல்லியபுயனே, சுங்கனே
எம்மிடர்களை களைய சினமதைத் தவிர்த்து சீக்கிரம் வாவா
ஓம் வசிவசி வசிவசி சுவாஹா

om-mantra

இந்த மந்திரத்தை வளர்பிறை வெள்ளிக்கிழமை, அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகிய ஏதேனும் ஒரு தினத்தில் முதன்முதலாக துதிக்க தொடங்குவது சிறப்பு. இந்த மந்திரத்தை துதிக்க தொடங்கும் தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு, உணவேதும் உண்ணாமல், உங்கள் வீட்டு பூஜையறையில் இருக்கின்ற லட்சுமி திருவுருவ படத்திற்கு முன்பாக நெய் தீபம் ஏற்றி, மாதுளை பழம் அல்லது கற்கண்டுகள் போன்றவற்றை நைவேத்தியம் வைத்து, வடக்கு திசையை பார்த்தவாறு 9, 27 அல்லது 108 எண்ணிக்கை அளவில் மந்திரத்தை துதிக்கலாம்.

வெள்ளிக்கிழமைகளில் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று, அங்கிருக்கும் நவக்கிரக சன்னதியில் சுக்கிர பகவானுக்கு மொச்சை பயிறு அல்லது இனிப்பு ஏதேனும் நைவேத்தியம் வைத்து, மல்லி பூ சாற்றி, தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை துதிப்பதால் சிறப்பான பலன் உண்டு.

deepam

சித்தர்கள் அருளிய இம்மந்திரத்தை திட சித்தத்துடன் தொடர்ந்து துதித்து வருவதால் ஜாதகத்தில் சுக்கிர கிரகம் பலமிழந்து நீச்சம், பகை போன்ற நிலைகளை பெற்றவர்களும், சுக்கிர பகவானால் ஏற்படும் பாதகமான பலன்களின் தீவிரத்தன்மை குறைந்து, சுப பலன்களை பெற வழிவகுக்கும். பொருளாதார ரீதியிலான கஷ்ட நிலை மாறி, செல்வம் சிறிது சிறிதாக சேரத் தொடங்கும். சுக்கிர கிரகம் பலமிழந்த காரணத்தால் சுகபோக வாழ்விற்கு ஏற்பட்ட தடை நீங்கி நல்வாழ்வு பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published.