வினைகள் தீர்க்கும் வீரபத்திரர் மந்திரம்

வீரபத்திரர் காயத்ரி மந்திரம்

 

ஓம் தீக்ஷ்ணதேஹாய வித்மஹே
பக்தரக்ஷகாய தீமஹி
தந்நோ வீரபத்ர: ப்ரசோதயாத்

வாரத்தின் எந்த நாட்களிலும் இம்மந்திரத்தை கூறி வழிபடலாம் என்றாலும், ஞாயிற்று கிழமை மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக வீரபத்திரர் சந்நிதி இருக்கும் கோவிலுக்கு சென்று, பசுவெண்ணெய் சிறிது எடுத்து வீரபத்திரர் சிலையின் வாயில் தடவி, நெய்தீபம் ஏற்றி இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபட பில்லி, சூனியம், செய்வினை, ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீளலாம். மேலும் நம்மை ஏதானும் தீய சக்திகள் பீடித்திருந்தால் அவை நீங்கும்.

தீய சக்திகளை அழிக்க, நல்லவற்றை காப்பாற்ற சிவ பெருமான் பல முறை பல்வேறு வடிவங்களை எடுத்துள்ளார். அதில் ஒன்று தான் இந்த “வீரபத்திரர்” வடிவம். புராண காலத்தில் தக்சனுடனான போரின் போது, சிவ பெருமானின் உடலில் இருந்து அவரது அம்சமாகவே தோன்றியவர் தான் வீரபத்திரர். சிவனின் மற்றொரு அம்சமான பைரவரை போலவே இந்த வீரபத்திரரும் ஒரு காவல் தெய்வமாக வழிபடப்படுகிறார்.

muneeswaran

சிவபெருமானை வழிபடும் சைவர்களிடம் இந்த வீரபத்திரர் வழிபாடு இன்றும் பரவலாக கடைபிடிக்கப்படுகிறது. வீரபத்திரரை ஆலயத்தின் இறைவனாக கொண்ட கோவில்கள் தமிழகத்தில் ஒன்று, ஆந்திரத்தில் ஒன்று மற்றும் உத்திரகாண்டில் ஒன்று என மொத்தம் மூன்றே கோவில்கள் தான் பாரதத்தில் உள்ளன. தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் காவல் தெய்வமாக வழிபடப்படுகிறார் வீரபத்திரர். தீய சக்திகளை அழிக்கும் சக்தி படைத்த வீரபத்திரரை இம்மந்திரத்தை கூறி நாம் வழிபடுவதால், நம்மை பீடித்திருக்கும் அனைத்து தீமைகளும் நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published.