வீட்டின் செல்வ கடாட்சம், பல மடங்காக பெருகிக்கொண்டே செல்ல, உச்சரிக்க வேண்டிய 10 எழுத்து மந்திரம்!

நம்முடைய வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்கி, செல்வ கடாட்சம் எப்போதுமே நிறைந்திருக்க வேண்டும் என்று தான் நம்முடைய பூஜைகளை செய்து வருகின்றோம். நாம் செய்யும் தொழிலில் விருத்தி அடைய வேண்டும், நம் கைக்கு வரும் பணம் பல மடங்காக பெருகி கொண்டே இருக்க வேண்டும், செய்யும் வேலையில் முன்னேற்றம் இருந்து கொண்டே இருக்க வேண்டும், இப்படியாக எல்லா விதமான வெற்றியும், நம்மை பின் தொடர்ந்து கொண்டே வர வேண்டும் என்றால், நாம் பூஜையில் உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன, என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

mahalakshmi

மந்திரம் என்ற உடன், இதை உச்சரிப்பதற்கு சிரமமாக இருக்கும் என்று பயப்பட வேண்டாம்! எல்லாருடைய வாயிலும் சுலபமாக உச்சரிக்கும் அளவிற்கு சுலபமான மந்திரம்தான் இது. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் காலை எழுந்து, நம்முடைய வீடு, என்றைக்கும் லட்சுமி கடாட்சத்துடன் இருக்க வேண்டும் என்று எண்ணி, பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றி வைத்து, இந்த மந்திரத்தை உச்சரித்தால் அந்த வீட்டின் செல்வம், நிம்மதி, ஆரோக்கியம் இப்படி எல்லா வகையான நன்மைகளும், 16 வகையான செல்வங்களும், விருத்தியாதி கொண்டே செல்லும். அதாவது, பல மடங்காகப் பெருகிக் கொண்டே செல்லும் என்று நம்முடைய சாஸ்திர நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சத்தை பலமடங்கு பெருக்கக் கூடிய அந்த மந்திரம் உங்களுக்காக இதோ!

சர்வசர நம சிவாய!

mahalakshmi

இந்த மந்திரத்தை, 108 முறை உச்சரிப்பதில் எந்த ஒரு சிரமமும் யாருக்கும், கட்டாயம் இருக்காது. வீட்டிலுள்ள பெண்கள் நம்பிக்கையோடு 48 நாட்கள் இந்த மந்திரத்தை சொல்லி, உங்கள் வீட்டில் எம்பெருமானையும், பராசக்தியையும் வழிபட்டு வாருங்கள்! கட்டாயம் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

– Advertisement –

சிலபேருக்கு எந்த மந்திரத்தை சொல்லி, எந்த வழிபாட்டை செய்தாலும், அந்த மந்திரத்தின் மூலம் பலன் என்பது கிடைக்காமல் இருக்கும். எந்த மந்திரத்தை உச்சரித்தும் பலன் இல்லை! என்ன பூஜைகள் செய்தும் பலன் இல்லை! என்று கஷ்டப்படுபவர்களுக்கு ஒரு நல்ல தீர்வும் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

amavasai1

நீங்கள் உச்சரிக்கும் மந்திரத்தின் மூலம், உங்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்றால், அந்த மந்திரத்தை ஒருமுறை அமாவாசை தினத்தில் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் 108 முறை உச்சரிக்கும் பட்சத்தில் அந்த மந்திரத்தின் மூலம் நமக்கு கட்டாயம் பலன் கிடைக்குமென்றும் சொல்லப்பட்டுள்ளது. அதன்பின்பு, அந்த மந்திரத்தின் மூலம் நீங்கள் அடைய வேண்டிய பலன் உங்களை வந்து சேரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

amavasai

வாய் திறந்து உச்சரிக்கக் கூடிய மந்திரத்தை விட, மனதார உள்மனதில் உச்சரிக்கப்படும் மந்திரத்திற்கு சக்தி அதிகம் என்ற ஒரு கருத்தும் உள்ளது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் ஒரு அமாவாசை தினத்தன்று, ஏதாவது ஒரு மந்திரத்தை, மனதார உச்சரித்து பாருங்கள்! அதற்கான பலனை கட்டாயம் நீங்கள் உணர்வீர்கள் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published.