வெற்றி கை கூடி வர உதவும் ஜய அனுமன் மந்திரம்

ஜெய அனுமன் மந்திரம்

 

ஓம் ராம நாம மூலாதாரஸ்தாய வித்மஹே
ராம மந்த்ரா வரிவாஸாய ரஹஸ்யார்த்த கௌலிக்கார்தாய தீமஹி
தந்நோ விதி ஹரி கிரிஷை ஈத்யாய ஜெய அனுமன் ப்ரசோதயாத்

சமஸ்கிருத மொழியில் ஜெயம் என்பது வெற்றியை குறிக்கும் ஒரு சொல்லாகும். அந்த ஜெய என்ற சொல்லை அடைமொழியாக கொண்ட ஸ்ரீ ராமனின் அன்புக்குரிய சேவகரான “ஸ்ரீ ஜெய அனுமானின்” இம்மந்திரத்தை எந்த ஒரு கிழமையிலும் காலையில் 6 மணியிலிருந்து 9 மணிக்குள்ளாக அனுமன் கோவிலுக்கோ அல்லது சந்நிதிக்கோ சென்று, வெற்றிலை மாலையை அனுமனுக்கு சாற்றி எலுமிச்சம் பழத்தில் நெய் தீபம் ஏற்றி, இம்மந்திரத்தை 27 அல்லது 108 முறை கூறி வழிபட்டால் நீங்கள் தொடங்கும் அனைத்து செயல்களும் வெற்றிபெற செய்வார் ஸ்ரீ ஜெய அனுமன்.

வாழ்வில் சிலருக்கு சில விடயங்கள் சுலபமாக கிடைத்திருக்கலாம். ஆனால் பெரும்பாலானோருக்கு சாதாரண சமாச்சாரங்கள் கூட பெரும் போராட்டத்திற்கு பின்பே கிடைக்கிறது. தோல்வி என்பது வெற்றிக்கான பாதையை காட்டும் ஒரு வழிகாட்டியாக இருந்தாலும் அதுவே எல்லாவற்றிலும் நிரந்தரமாக வருவதை எப்போதும் ஏற்றுக்கொண்டிருக்க முடியாது. இன்று நாம் ஈடுபடும் எந்த ஒரு செயலுக்கான முயற்சியிலும் அதில் வெற்றியடைவது ஒரு கவுரவத்திற்குரிய விடயம் என்பதை விட வாழ்வின் அவசியம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

hanuman

ஒரு செயலில் ஈடுபட்டு வெற்றியடைய மிகுந்த ஊக்கமும், விடாமுயற்சியும் பொறுமை அதே நேரத்தில் எளிதில் மனம் தளராத குணம் ஆகியவை ஒருவருக்கு இருக்க வேண்டும். இந்த அத்தனை குணங்களையும் பெற்றிருந்தவர் தான் ராமாயண காப்பியத்தின் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் தாசனாக விளங்கிய ஸ்ரீ அனுமன். எந்த ஒரு காரியமும் தொடங்கி அது முழுமையாக பூர்த்தியடைந்து வெற்றி பெற ஸ்ரீ ஜெய அனுமனின் இம்மந்திரத்தை கூறி வழிபட நீங்கள் எதிலும் வெற்றியை காண்பீர்கள்.

Leave a Reply

Your email address will not be published.