“ஏகம்” என்றால் ஒன்று, “தசம்” என்றால் பத்து என்று பொருள். ஒவ்வொரு மாதமும் சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் வரும் “11” ஆவது திதி தினம் தான் “ஏகாதசி” திதி தினம். ஒரு வருடத்தில் மொத்தம் 25 ஏகாதசி திதி தினங்கள் வருகின்றன. இதில் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி தினம் மகத்துவம் வாய்ந்த ஏகாதசி விரதம் இருப்பதற்கு மிகவும் சிறந்த தினமாகும். இந்த தினத்தில் இரவு உறங்காமல் கண்விழித்து விரதம் இருப்பவர்கள் துதிக்க வேண்டிய அற்புத ஸ்ரீ ரங்கநாதர் ஸ்தோத்திரம் இதோ.
ஸ்ரீ ரங்கநாதர் ஸ்தோத்திரம்
ஸப்த ப்ராகார மத்யே ஸரஸி ஜமுகுளோத் பாஸமானே விமானே
காவேரி மத்ய தேஸே ம்ருதுதரபணிராட் போக பர்யங்க பாகே
நித்ரா முத்ராபிராமம் கடிநிகிட ஸிர பார்ஸ்வ வின்யஸ்த ஹஸ்தம்
பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கராஜம் பஜேஹம்
108 வைணவ திவ்ய தேசங்களில் முதலாவது திவ்ய தேசமான “திருவரங்கம்” ஸ்ரீ ரங்கநாதர் பெருமாளை போற்றும் ஸ்தோத்திரம் இது. இந்த ஸ்தோத்திரம் மற்ற எந்த நாட்களை விடவும் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று கூறி ஜெபிப்பது மிகுந்த பலன்களை தரும். வைகுண்ட ஏகாதசி தினமன்று இரவில் தூங்காமல் கண் விழித்து விரதம் இருக்கும் நபர்கள் இந்த ஸ்தோத்திரத்தை 1008 முறை உரு ஜெபித்து பெருமாளை வணங்க அவர்களின் பாவங்கள் நீங்க பெறும். உடல் மற்றும் மனதில் ஆன்மீக ஆற்றல் அதிகரிக்கும். மன அமைதி கிடைக்கும். வாழ்வில் செல்வங்களை அள்ளி தரும் யோகங்கள் உண்டாகும்.
காவிரிநதியின் நடுவில் ஏழு மதில்களால் சூழப்பட்ட கோவிலில் வீற்றிருப்பவரே, ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டவரே, இடது கையை இடுப்பில் வைத்து யோக நித்திரையில் இருப்பவரே, ஸ்ரீதேவி, பூதேவி தாயாரால் வணங்கப்படும் திருப்பாதம் கொண்டவரே ரங்கநாதரே, உம்மை வணங்குகிறேன் என்பதே இந்த ஸ்தோத்திரத்தின் பொதுவான பொருளாகும்.