Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன்
பஞ்சாங்கம்
°°°°°°°°°°°°°°°°°
புரட்டாசி – 20
அக்டோபர் – 07 – ( 2022 )
வெள்ளிக்கிழமை
ஶுபக்ருத்
தக்ஷிணாயனே
வர்ஷ
கன்யா
ஸுக்ல
த்வாதசி ( 3.4 ) ( 07:14am )
&
த்ரயோதசி ( 55.41 )
ப்ருகு
சதயம் ( 32.27 ) ( 06:59pm )
&
பூரட்டாதி
கண்ட யோகம்
பாலவ கரணம் ( 3.4 ) ( 07:14am )
&
கெளலவ கரணம்
ஸ்ராத்த திதி – த்ரயோதசி
சந்திராஷ்டமம் – கடக ராசி
புனர்பூசம் நான்காம் பாதம் , பூசம் , ஆயில்யம் வரை .
கடக ராசி க்கு அக்டோபர் 06 ந்தேதி காலை 08:52 மணி முதல் அக்டோபர் 08 ந்தேதி மதியம் 12:23 மணி வரை. பிறகு சிம்ம ராசி க்கு சந்திராஷ்டமம்.
சூர்ய உதயம் – 06:07am
சூர்ய அஸ்தமனம் – 06:05pm
ராகு காலம் – 10:30am to 12:00noon
யமகண்டம் – 03:00pm to 04:30pm
குளிகன் – 07:30am to 09:00am
தின விசேஷம் – ப்ரதோஷம்
&
கோ த்வாதசி
இன்றைய அமிர்தாதி யோகம்
இன்று முழுவதும் ஸித்த யோகம்
மேஷம் -ராசி:
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். முயற்சிகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை.
அஸ்வினி : புத்துணர்ச்சியான நாள்.
பரணி : இன்னல்கள் குறையும்.
கிருத்திகை : முன்னேற்றமான நாள்.
ரிஷபம் -ராசி:
வியாபார பணிகளில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். மனை நிமிர்த்தமான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். உடனிருப்பவர்களை பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்களில் ஆதாயமான சூழல் ஏற்படும். செல்வாக்கு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரோகிணி : மாற்றம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : ஆதாயகரமான நாள்.
மிதுனம் -ராசி:
வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆன்மிக செயல்பாடுகளில் ஈர்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். ஆசைகள் நிறைவேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.
மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.
திருவாதிரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.
கடகம் -ராசி:
தனவரவில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். இயந்திரம் தொடர்பான பணியில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். சந்திராஷ்டமம் நடைபெறுவதால் கவனமும் பொறுமையும் அவசியம். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்து கொள்வது நல்லது. சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
புனர்பூசம் : ஏற்ற, இறக்கமான நாள்.
பூசம் : அனுசரித்து செல்லவும்.
ஆயில்யம் : கருத்துக்களை தவிர்க்கவும்.
சிம்மம் -ராசி:
உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான துறைகளில் லாபம் ஏற்படும். நண்பர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். சமூக பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
மகம் : அறிமுகம் உண்டாகும்.
பூரம் : லாபம் ஏற்படும்.
உத்திரம் : முன்னேற்றமான நாள்.
கன்னி -ராசி:
தாய்மாமன் வகையில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்தும் பொழுது கவனம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.
உத்திரம் : ஆதரவான நாள்.
அஸ்தம் : பிரச்சனைகள் குறையும்.
சித்திரை : கவனம் வேண்டும்.
துலாம் -ராசி:
சிற்றின்பம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் வருகையின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் மற்றும் நட்பு கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.
சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.
சுவாதி : மகிழ்ச்சியான நாள்.
விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.
விருச்சிகம் -ராசி:
வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வாகன பயணங்களின் மூலம் லாபம் உண்டாகும். கால்நடைகளின் மூலம் மேன்மையான சூழல் அமையும். ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆதரவின் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.
விசாகம் : இழுபறிகள் குறையும்.
அனுஷம் : மேன்மை உண்டாகும்.
கேட்டை : தடைகள் குறையும்.
தனுசு -ராசி:
மனதில் தன்னம்பிக்கை மேம்படும். சிறு தொழில் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.
மூலம் : தன்னம்பிக்கை மேம்படும்.
பூராடம் : அனுசரித்து செல்லவும்.
உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.
மகரம் -ராசி:
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். புதுமையான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் வியாபாரத்தின் போக்கினை மாற்றி அமைப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : அறிமுகம் உண்டாகும்.
அவிட்டம் : மாற்றமான நாள்.
கும்பம் -ராசி.
திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். பணி நிமிர்த்தமான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். தாமதம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.
சதயம் : ஆர்வம் அதிகரிக்கும்.
பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
மீனம் -ராசி:
கோபமான பேச்சுக்களை குறைத்து கொள்வது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். பிறமொழி பேசும் மக்களிடம் கவனம் வேண்டும். மனதிற்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். தொழில் சம்பந்தமான செயல்பாடுகளில் ஆதரவான சூழல் ஏற்படும். உழைப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : விருப்பம் நிறைவேறும்.
ரேவதி : ஆதரவான நாள்.